மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தால் நாட்டுக்கு ஆபத்து பாகிஸ்தான் ராணுவ மந்திரி அலறல்


மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தால் நாட்டுக்கு ஆபத்து பாகிஸ்தான் ராணுவ மந்திரி அலறல்
x
தினத்தந்தி 21 Feb 2017 11:15 PM GMT (Updated: 21 Feb 2017 7:20 PM GMT)

இந்தியாவின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து, கடந்த 2008–ம் ஆண்டு நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர்,

இஸ்லாமாபாத்,

லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிறுவனர் ஹபீஸ் சயீத். தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வந்த இவர், கடந்த மாதம் பாகிஸ்தான் அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4–வது அட்டவணையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘‘ஹபீஸ் சயீத்தால் பாகிஸ்தானுக்கு ஆபத்து உள்ளது. எனவேதான் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டு நலனின் அடிப்படையில்தான் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பயங்கரவாதம் எந்த மதத்துக்கும் ஏற்றது அல்ல. பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்கள் அல்ல, முஸ்லிம்கள் அல்ல, புத்த சமயத்தினரும் அல்ல, இந்துக்களும் அல்ல’’ என்று குறிப்பிட்டார்.

‘‘பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகத்தான் பார்க்க வேண்டும். அவர்கள் குற்றவாளிகள்’’ என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானில் முன்னணியில் நின்று போரிடுகிற ஒரு நாடு. தனது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற பாகிஸ்தான் தொடர்ந்து பாடுபடும்’’ எனவும் குறிப்பிட்டார்.


Next Story