ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு


ஆஸ்கர் விருதுகள்: ஜாக்கி சானுக்கு கவுரவ விருது, சிறந்த வெளிநாட்டு மொழி படமாக தி சேல்ஸ்மேன் தேர்வு
x
தினத்தந்தி 27 Feb 2017 3:26 AM GMT (Updated: 27 Feb 2017 3:25 AM GMT)

89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது.

லாஸ்ஏஞ்சல்ஸ், 

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு, துவங்கியது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் மூன்லைட், லா லா லேண்டு, ஹேக்சா ட்ஜ், லயன் போன்ற படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இருக்கின்றன. ஆஸ்கர் விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டவர்களின் விபரம்:-

*1960 ஆம் ஆண்டுகளில் இருந்து படத்தில் நடித்து வருவதால் ஜாக்கிசானுக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது.
*சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.
*சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பென்சஸ் படத்தில் நடித்த வயோலா டேவிஸ் வென்றார்.
*சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பென்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு ஃபைன்ட் தம் படத்துக்காக கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார்

*சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர்விருது சூசைட் ஸ்குவாட் படத்தில் பணிபுரிந்த அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ,  கிறிஸ்டோபர் நெல்சன் வென்றனர்
*சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர்விருதை ஒ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. விருதை எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ பெற்றுக்கொண்டனர்
*சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை அரைவல் திரைப்படம் வென்றது
*சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை ஹாக்ஸா ரிட்ஜ் திரைப்படம் வென்றது

*சிறந்த அனிமேஷன் குறும் படத்துக்கான விருதை பைபர் படம் பெற்றுள்ளது.
*சிறந்த தயாரிப்பு வடிவைமைப்புக்கான விருதை  லாலா லேண்ட்படம் வென்றது.
*சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான விருது ஈரானின் தி சேல்ஸ்மேன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டவருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் படத்தின் இயக்குநர் அஸ்கார் ஃபர்காதி விருதை பெறவில்லை

 *சிறந்த துணை நடிகர் பிரிவில் லயன் படத்தில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர் தேவ் படேலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலி சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார். 


Next Story