101 வயதான அமெரிக்க கோடீசுவரர் ராக்பெல்லர் மரணம்


101 வயதான அமெரிக்க கோடீசுவரர் ராக்பெல்லர் மரணம்
x
தினத்தந்தி 21 March 2017 3:26 AM GMT (Updated: 21 March 2017 3:26 AM GMT)

அமெரிக்காவின் பெரும் பணக்காரர் 101 வயதான அமெரிக்க கோடீசுவரர் ராக்பெல்லர் மரணம் அடைந்தார்.

நியூயார்க். 

அமெரிக்காவின் பெரும்பணக்காரரும், கொடை வள்ளலுமான டேவிட் ராக்பெல்லர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101. இதய கோளாறு காரணமாக, நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

டேவிட் ராக்பெல்லர், மன்ஹட்டன் நகரில் ஜான் டி ராக்பெல்லர் ஜூனியரின் 6–வது மகனாக பிறந்தார். பிறகு, அவரது குடும்பம் நியூயார்க்குக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். 1942–ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். ‘சேஸ் மன்ஹட்டன் கார்ப்’ நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

தனது வாழ்நாளில் அவர் ரூ.13 ஆயிரத்து 600 கோடி தானமாக கொடுத்துள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.22 ஆயிரத்து 220 கோடி ஆகும். கடந்த 2002–ம் ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டார். அவருக்கு 6 பிள்ளைகளும், 10 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Next Story