புடவை விலகிய ’தமிழ்’ மணப்பெண்ணின் படம் கிளப்பிய சர்ச்சை


புடவை விலகிய ’தமிழ்’ மணப்பெண்ணின் படம் கிளப்பிய சர்ச்சை
x
தினத்தந்தி 24 March 2017 6:57 AM GMT (Updated: 24 March 2017 6:57 AM GMT)

கனடா நாட்டின் பத்திரிகை ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்டுரையில் இல்லை. அட்டைப்படமே சர்ச்சையாகி விட்டது.

டொராண்டோ

கனடா நாட்டில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்று தமிழ் மணப்பெண்கள் பற்றிய கட்டுரை ஒன்றை கவர் ஸ்டோரியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தது. பிரச்சினை கட்டுரையில் இல்லை. அட்டைப்படமே சர்ச்சையாகி விட்டது. அட்டைப்படத்தில் மணப்பெண் சிறிதளவு தொடையும், அடிப்பாதம் வரை கால்களையும் வெளிக்காட்டியபடியும், புடைவையையும் ஒரு புறம் மட்டுமே அணிந்தும் காணப்படும் அப்படம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்று வருகிறது.

அதேசமயம் அட்டைப்படத்திற்கு மாடலாக இருந்த தனுஸ்கா சுப்ரமணியம் முதல் பலரும் இப்படத்தை ஆதரித்தும் பேசி வருகின்றனர்.

இச்சஞ்சிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் கமெண்ட் இட்டிருந்த வாசகர் ஒருவர், “ இது போல சேலை அணிந்த தமிழ் மணப்பெண் ஒருவரை எங்கேனும் காண்பிக்க முடியுமா?... தமிழ் கலாச்சாரத்தை கேலி செய்கிறார்கள்” என்று கொதித்திருக்கிறார்.

 ”ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குறி வைத்து விமர்சிப்பது சமத்துவமா? எதை வேண்டுமானாலும் ஒருவர் அணியலாம் ஆனால் ஒரு இனத்தவரின் நம்பிக்கைகளை தாக்கக்கூடாது. வேறு ஒருவரோ நீங்கள் உலகத்திலுள்ள எத்தகைய காரணத்தையும் சொல்லலாம். ஆனால் உண்மை உறுதியானது... ஏனெனில் இப்படத்திலிருப்பது தமிழ்மணப்பெண்ணேயல்ல”.. இப்படியெல்லாம் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

”ஒரு மணப்பெண் தன்னை எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொள்ளலாம். அவருடைய தனித்தன்மை அதில் வெளிப்படும். இந்தக் குறிப்பிட்ட இதழ் மணப்பெண்கள் தங்கள் புடவையையும், நகையையும் எப்படி அணிய விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சிறப்பிதழ்” என்கிறார் இதழின் ‘க்ரியேட்டிவ் டைரக்டர்” தட்சிகா ஜெயசீலன். இன்னும் பலர் தங்கள் மனதை எந்த விதத்திலும் இப்படம் காயப்படுத்தவில்லை

என்கின்றனர். ”இது வெறும் அட்டைப்படம் மட்டுமே. இதில் கலையுணர்வு இருக்கிறது. கலை ரசனையுடன் நல்லதொரு அணி இதை வடிவமைத்துள்ளனர்” என்றும் ஒருவர் கருத்திட்டிருக்கிறார். ஆனால் தனுஸ்காவோ இதன் பின்னால் இருக்கக்கூடிய தமிழ்த் திறமையை யாரும் காணவில்லை. எதிர்மறையாக சிந்திப்பவர்களே இதைக் குறை கூறி வருகிறார்கள். இவர்கள் பேசுவது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனக்கு இப்படம் பிடித்திருக்கிறது. நான் இது போல அருமையாக இருப்பேன் என்று நினைக்கவேயில்லை என்கிறார் அவர் முத்தாய்ப்பாக.

Next Story