சின்ஜியாங்கில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு 12 பெயர்களை வைக்க கூடாது என சீனா தடை உத்தரவு


சின்ஜியாங்கில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு 12 பெயர்களை வைக்க கூடாது என சீனா தடை உத்தரவு
x
தினத்தந்தி 25 April 2017 12:11 PM GMT (Updated: 25 April 2017 12:10 PM GMT)

சின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு 12 பெயர்களை வைக்க கூடாது என சீனா அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமானோர் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களுக்கு தொழுகை முதல் ஆடை வரையில் பல்வேறு விவகாரங்களுக்கு சீன அரசின் உத்தரவைதான் பின்பற்ற வேண்டும். சின்ஜியாங் மாகணத்தில் உய்கர் இஸ்லாமியர்கள் சீன அரசின் அடக்குமுறையின் கீழ் உள்ளனர். அங்கு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என சீன ராணுவம் அவ்வபோது நடவடிக்கையையும் முன்னெடுக்கிறது. அப்பகுதியானது ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. சின்ஜாங்கில் மதம் மீதான கண்காணிப்பும் அழுத்தமும் தொடர்ந்து அதிகரிக்கிறது. 

மசூதிகளில் இளம் தலைமுறையினரை காண முடியாத நிலையும், வயதானவர்கள் தவிர மற்றவர்களிடம் தாடி இல்லாமல் உள்ள நிலையுமே தொடர்கிறது.

இப்போது சீன அரசு சின் ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு 12 பெயர்களை வைக்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இஸ்லாம், குர்ரான், மெக்கா, ஜிகாத், இமாம், சதாம், ஹஜ் மற்றும் மதினா என்பன உள்பட 12 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பெயர்கள் வைக்கப்பட்ட சீன பள்ளிகளில் குழந்தைகள் படிப்பதற்கு அனுமதி கிடையாது எனவும் சீனா உறுதியாக கூறிஉள்ளது. சீன அரசின் இந்நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை அனுப்பிவிட்டும், பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டும் அமைதியை சீர்குலைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் இஸ்லாமியர்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என கூவுகிறது, ஆனால் அதன் மிகவும் நெருங்கிய நட்பு நாடு கூறிகொள்ளும் சீனாவிடம் சின்ஜியாங்கில் இஸ்லாமியர்கள் மீது ராணுவம் வன்முறையை பிரயோகிப்பது தொடர்பாக வாய்திறப்பது கிடையாது.


Next Story