வட கொரிய பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்குத் தயார் - அமெரிக்கா


வட கொரிய பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்குத் தயார் - அமெரிக்கா
x
தினத்தந்தி 26 April 2017 10:04 PM GMT (Updated: 26 April 2017 10:03 PM GMT)

அமெரிக்க நிர்வாகம் தடைகளின் மூலமே வட கொரியாவுடனான பிரச்சினைக்கு தீர்வுக் காண விரும்பினாலும் பேச்சுவார்த்தைக்கும் இடமுள்ளது என அறிவித்துள்ளது.

வாஷிங்டன்

அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திரம் வட கொரியாவை அதன் அணு ஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளையும் நிறுத்த வைப்பதேயாகும். அதை சாதிக்க தடைகளையே முக்கிய வழிமுறையாக கருதினாலும், பேச்சு வார்த்தைகளுக்கான கதவுகளையும் திறந்தே வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் சொல்கின்றனர்.

அமெரிக்க கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், நிலைத்ததன்மையையுமே விரும்புகிறது. அதை அடைய பேச்சுவார்த்தை வழிமுறையையும் அமெரிக்க கைக்கொள்ளத் தயார். என்றாலும் கூட எங்களையும், கூட்டாளிகளையும் பாதுகாக்கத் தயாராகவே இருக்கிறோம் என்கிறது அதிகாரிகளின் கூட்டறிக்கை ஒன்று. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன், பாதுகாப்புச் செயலர் ஜிம் மாட்டிஸ் மற்றும் தேசிய உளவு நிறுவன இயக்குநர் டான் கோட்ஸ் ஆகியோர் இணைந்து இக்கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


Next Story