லிபியாவின் தீவிரவாத முகாம்கள் மீது எகிப்து விமானத் தாக்குதல்

லிபியாவின் தீவிரவாத முகாம்கள் மீது எகிப்து விமானத் தாக்குதல்
x
தினத்தந்தி 26 May 2017 10:17 PM GMT (Updated: 26 May 2017 10:16 PM GMT)

கிறிஸ்துவர் ஊர்வலம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியாவின் தீவிரவாத முகாம்களை குறி வைத்து விமானங்கள் குண்டு வீசியதாக எகிப்து அதிபர் கூறினார்.

கெய்ரோ

கிறிஸ்துவர் ஊர்வலம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து லிபியாவின் தீவிரவாத முகாம்களை குறி வைத்து விமானங்கள் குண்டு வீசியதாக எகிப்து அதிபர் கூறினார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய எகிப்திய அதிபர் அல்-சிசி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். விமானங்கள் லிபியாவில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தின. மாலை நேரம் துவங்கிய பின்னர் இத்தாக்குதல்கள் நடந்ததாக அவர் கூறினார். முன்னதாக கிறிஸ்துவ மடம் ஒன்றை நோக்கி சென்று கொண்டிருந்த காப்டிக் கிறிஸ்துவர்கள் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் மரணமடைந்தனர். 

தீவிரவாத பயிற்சிக்கு தளமாக இருக்கும் முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடரும்; அவை உள்நாட்டில் இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி என்றார் அதிபர்.

Next Story