டிரம்ப், மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த காட்சி


டிரம்ப், மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த காட்சி
x
தினத்தந்தி 27 May 2017 8:57 AM GMT (Updated: 27 May 2017 8:57 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மோன்டேனெக்ரோ நாட்டு பிரதமரை தள்ளிவிட்டு முன்னுக்கு வந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பெல்ஜியத்தின் பரஸ்ஸல்சில் நேட்டோ நட்பு நாடு தலைவர்கள் சந்தித்தனர்.

இதில், மோன்டெனெக்ரோ நாட்டு பிரதமர் டஸ்கோ மார்கோவிச், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அப்போது பின்னால் நடந்து வந்த டிரம்ப் திடீரென முன்னால் நடந்து சென்ற டஸ்கோ மார்கோவிச்சின் வலது பக்க தோள்பட்டையை வேகமாக தள்ளிக் கொண்டு முன்னால் வந்து தன்னை முன்னிலை படுத்தி கொண்டார்.

யார் இவ்வாறு செய்தது என தெரியாமல் முதலில் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டஸ்கோ மார்கோவிச், அது அமெரிக்க அதிபர் என்று தெரிந்தவுடன் புன்னகையை பரிசாக அளித்தார்.

யாரென்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டஸ்கோ மார்கோவிச், டிரம்ப் என்று தெரிந்தவுடன் சமாளித்தார்.  இது குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Next Story