வளைகுடா சிக்கல்: கத்தாருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரிக்கை


வளைகுடா சிக்கல்: கத்தாருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Jun 2017 10:42 PM GMT (Updated: 23 Jun 2017 10:42 PM GMT)

தங்களது கோரிக்கைகளை கத்தார் ஏற்காவிட்டால் ‘நிரந்தர உறவு முறிவை’ சந்திக்க வேண்டியிருக்கும் என்று தூதரக உறவை முறித்துக் கொண்ட அண்டை நாடுகள் எச்சரித்துள்ளன.

துபாய்

கோரிக்கை பட்டியலில் அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல், கத்தாரில் தங்கியுள்ள சில தனிநபர்களை தங்களிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட நீண்ட கோரிக்கைகளை அவை முன்வைத்துள்ளன. இதனிடையே இந்த பிரதேச மோதலை முடிவிற்கு கொண்டு வர ஐநா சமரசம் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளது.

ஆனால் தனது ஒளிபரப்பை மூடக் கோருவது ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல் என்று அல்-ஜசீரா கூறியுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சின் அயலுறவு அமைச்சரான அன்வர் கர்காஷ் தனது ட்வீட்டர் பதிவில், “ கத்தார் தனது அண்டை நாடுகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலிப்பது புத்திசாலித்தனமானது இல்லாவிட்டால் ‘நிரந்தர உறவு முறிவை’ நிரந்தரமாக சந்திக்க வேண்டும் என்றார்.

இவ்விஷயத்தில் தானும் உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது. 

கர்காஷ் மேலும் கூறுகையில் அண்டை நாடுகளின் கோரிக்கைகளை கத்தார் கசிய விடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.


Next Story