பிரதமர் மோடியும், நானும் சமூக வலைதளங்களில் சர்வதேச தலைவர்கள் - டொனால்டு டிரம்ப்


பிரதமர் மோடியும், நானும் சமூக வலைதளங்களில் சர்வதேச தலைவர்கள் - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 27 Jun 2017 5:51 AM GMT (Updated: 27 Jun 2017 5:51 AM GMT)

பிரதமர் மோடியும், நானும் சமூக வலைதளங்களில் சர்வதேச தலைவர்கள் என டொனால்டு டிரம்ப் விவரித்து உள்ளார்.

வாஷிங்டன்,

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். ரோஸ் கார்டனில் டொனால்டு டிரம்ப் பேசுகையில், “பிரதமர் மோடியும், நானும் சமூக வலைதளங்களில் சர்வதேச தலைவர்கள் என்பதை மீடியாக்கள், அமெரிக்க மற்றும் இந்திய மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள மிகவும் பெருமை கொள்கிறேன்,” என்றார். நாங்கள் நம்பிக்கையாளர்கள். நாட்டு மக்கள் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கி உள்ளோம். இது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. 

இருநாட்டு தலைவர்களும் சமூக வலைதளங்களில் மல்டி-மில்லியன் பாலோவர்களை கொண்டு உள்ளனர். சமூக வலைதளத்தில் அதிகமானோர் பின்தொடரும் உலக தலைவர்களாக இருவரும் உள்ளனர். இதனை குறிப்பிட்டே டொனால்டு டிரம்ப் பேசிஉள்ளார். மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றுகிறது என கூறிஉள்ளார் டொனால்டு டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய டுவிட்டர் செய்திகளால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். பிரதமர் மோடியின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு டுவிட்டரில் 32.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர், பிரதமர் மோடி அதனை நெருங்கிய அளவு, 31 மில்லியன் பலோவர்களை கொண்டு உள்ளார். பேஸ்புக்கில் பிரதமர் மோடி, டிரம்பை விட அதிகமான பின்தொடர்வோரை கொண்டு உள்ளார். பிரதமர் மோடிக்கு பேஸ்புக்கில் 41.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர், டிரம்பிற்கு 23.6 மில்லியன் பேர் உள்ளனர்.

Next Story