ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி


ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி
x
தினத்தந்தி 26 July 2017 9:24 AM GMT (Updated: 26 July 2017 9:24 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது நடந்த தலீபான் தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 26 பேர் பலியாகியுள்ளனர்.

கந்தஹார்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் அந்நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் அமைந்த ராணுவ தளம் மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில்  26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  13 பேர் காயமடைந்துள்ளனர்.  இத்தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

கந்தஹாரில் காக்ரெஜ் மாவட்டத்தில் கர்சாலி பகுதியில் உள்ள ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தைரியமுடன் எதிர்கொண்டு ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் ஊடுவல்காரர்கள் 80 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story