கால்பந்து போட்டி சவாலில் தோல்வி அடைந்து எலிக்கறி சாப்பிட்ட மேயர்


கால்பந்து போட்டி சவாலில் தோல்வி அடைந்து எலிக்கறி சாப்பிட்ட மேயர்
x
தினத்தந்தி 26 July 2017 9:25 AM GMT (Updated: 26 July 2017 9:25 AM GMT)

பிரான்ஸ் நாட்டில் கால்பந்து விளையாட்டு போட்டி பந்தயத்தில் தோல்வி அடைந்த அந்நாட்டு மேயர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கு பிரான்ஸில் உள்ள  மோன்ட் டி மர்சான்  நகர் மேயராக சாரலஸ் டயோட்  என்பவர் பதவி வகித்து வருகிறார்.

கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது  யார்  வெற்றி பெறுவார்கள் என பந்தயத்தில் ஈடுப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் ஜெயின் ஜெர்மைன்  அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

இப்போட்டியில் பந்திய கட்டிய மேயர் பாரீஸ் அணி தோல்வி அடைந்தால் எலி இறைச்சி சாப்பிடுவதாக சவால் விட்டார்.

விளையாட்டு போட்டி தொடங்கியதும் முதல் சுற்றில் பாரீஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது சுற்றில் பாரீஸ் அணி படு தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து சவால் விட்டவாறு  மேயர் எலி இறைச்சி சாப்பிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

பல நாட்களுக்கு பின்னர் எலி இறைச்சி சாப்பிடுவதாக ஒப்புக்கொண்ட மேயர் கடந்த சனிக்கிழமை அன்று ஓட்டல் ஒன்றில் அதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

மேஜையில் எலி இறைச்சி பரிமாறப்பட்டதும், மேயர் எவ்வித தயக்கமும் இன்றி எலி இறைச்சியை முழுவதுமாக சுவைத்து முடித்துள்ளார்.

இது குறித்து மேயர் பேசியபோது, ‘கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன். எலி இறைச்சி மிகவும் சுவையாக, முயல் இறைச்சியை போல் நன்றாக இருந்தது’ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Next Story