ஐஎஸ் அரசின் குற்றங்களை விசாரிக்க சர்வதேச உதவியை ஈராக் நோக்குகிறது


ஐஎஸ் அரசின் குற்றங்களை விசாரிக்க  சர்வதேச உதவியை ஈராக்  நோக்குகிறது
x
தினத்தந்தி 16 Aug 2017 9:18 PM GMT (Updated: 16 Aug 2017 9:18 PM GMT)

ஐஎஸ் இயக்கத்தின் ஆளுகையின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களை விசாரிக்க ஈராக் சர்வதேச உதவியை எதிர்நோக்குகிறது.

ஐநா அவை

விரைவில் பிரிட்டன் ஐநா பாதுகாப்பு சபையில் இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் மனித உரிமை வழக்கறிஞர் அமல் க்ளூனியும், யசீதி இனப் பெண்ணும் ஐஎஸ் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவருமான நதியா முராத்தும் ஐநா விசாரணையை ஈராக் நடத்த அனுமதிக்குமாறு கோருகின்றனர். இங்கிலாந்து ஈராக் அரசு இதற்கு முறையான வேண்டுகோள் கடிதம் கொடுக்க வேண்டுமென்று கோரியதை அடுத்து ஈராக் அரசு கடிதம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

”ஐஎஸ் இயக்கத்தின் குற்றங்களை விசாரிக்க சர்வதேச சமூகத்தின் உதவியை கோருகிறோம்” என்று கடிதத்தில் வெளியுறவு அமைச்சர் இப்ரஹீம் ஜாஃபரி கூறியுள்ளார். இத்தீர்மானம் எப்போது வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை. ஐ எஸ் இயக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கிறார்கள் என்றார் க்ளூனி. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐநா நிபுணர்கள் ஐ எஸ் இயக்கம் இனப் படுகொலைகள் நிகழ்த்தி வருவதாக கூறியது. ஐஎஸ் கொலையாளிகளை ஈராக் நீதிமன்றங்களின் முன்னால் நிறுத்துவது முக்கியம் என்று ஈராக் அரசு ஐநாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.


Next Story