ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இன்று இறுதி முடிவு - அமெரிக்க அதிகாரிகள்


ஆப்கானிஸ்தான் விவகாரத்தில்   இன்று இறுதி முடிவு - அமெரிக்க  அதிகாரிகள்
x
தினத்தந்தி 21 Aug 2017 12:15 AM GMT (Updated: 21 Aug 2017 12:15 AM GMT)

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகள் குறித்து இன்று இறுதி முடிவெடுக்கவுள்ளார் அதிபர் டிரம்ப்.

வாஷிங்டன்

கடந்த 16 ஆண்டுகளாக அங்கு அமெரிக்கப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. அண்மைக்காலங்களில் தாலிபான் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் நாட்டின் 60 சதவீதப்பகுதிகளே உள்ளன. இந்நிலையில் அங்கு கூடுதல் படைகளை அனுப்புவதா வேண்டாமா என முடிவெடுக்க உள்ளார் அதிபர் டிரம்ப். 

தற்போது அங்கு 8,400 படை வீரர்கள் மட்டுமேயுள்ளனர். தனது பலத்தை சிறிதளவு உயர்த்த அதிபர் சம்மதிப்பார் என்றே அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க படைகள் முற்றிலுமாக விலகினால் அந்நாடு மீண்டும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்குவதோடு 2001 ஆம் ஆண்டில் நடந்தது போன்ற அமெரிக்கா மீதும் தாக்குதல் நடக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை ஆதரிப்பதால் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார் டிரம்ப். படைகளை குறைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதல்களை நடத்துவது அல்லது கூலிப்படைகளைக் கொண்டு தீவிரவாதிகளை அழிப்பது என்பது போன்ற யோசனைகளும் அதிபர் முன்பு வைக்கப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத சில அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story