ஆப்பிள் புதிய செல்ஃபோன் ஐஃபோன் எக்ஸ்சை வெளியிட்டது


ஆப்பிள் புதிய செல்ஃபோன்   ஐஃபோன் எக்ஸ்சை  வெளியிட்டது
x
தினத்தந்தி 12 Sep 2017 10:43 PM GMT (Updated: 12 Sep 2017 10:43 PM GMT)

தனது முதல் செல்ஃபோன் வெளிவந்த பத்தாம் ஆண்டின் நினைவு தினத்தில் புதிய செல்ஃபோனான ஐஃபோன் எக்ஸ்சை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்.

க்யூப்பர்டினோ (அமெரிக்கா)

இப் புதிய செல்ஃபோனில் முகத்தை அடையாளம் தெரிந்து கொள்ளும் வசதியுள்ளது. மேலும் புதிய ஃப்யூச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை அடுத்த பத்தாண்டுகளுக்கான மொபைல் ஃபோன் என்று ஆப்பிள் அடையாளம் காண்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் இதே நாளில் தனது முதல் செல்ஃபோனை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் இதன் விலை 999 டாலர்கள் என்று நிர்ணயித்துள்ளது. இத்தோடு ஐஃபோன் 8 மற்றும் ஐஃபோன் 8 ப்ளஸ் என இரு புதிய மொபைல்களையும் அது வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை முறையே 699 மற்றும் 799 டாலர்களாகும்.

மூன்று ஃபோன்களிலும் ஒயர்லெஸ் சார்ஜர்களும் உள்ளன. பிராசஸர்களும் கேமராக்களும் கூட அதிக சக்தி வாய்ந்தவையாகும். 

புது செல்ஃபோன்கள் அறிமுகம் ஆனாலும் ஆப்பிளின் சந்தை சரிந்துதான் வருகிறது. சீனாவின் ஹூவாயி மொபைல் விற்பனையில் ஆப்பிளை பின் தள்ளி விட்டுள்ளது. கொரியாவின் சாம்சங்கும் ஆப்பிளுக்கு கடும் சவாலை கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 வெளிவந்துள்ளது. இதன் வசதி மொபைல் ஃபோன்கள் இல்லாமல் பேச முடியும், அதே போல இசைக் கேட்பது மற்றும் இதர செயல்களை செய்ய முடியும்.


Next Story