டொனால்ட் டிரம்ப் பின்விளைவுகளை சிந்திக்காமல் சீண்டி வருகிறார் - வட கொரியா


டொனால்ட் டிரம்ப் பின்விளைவுகளை சிந்திக்காமல் சீண்டி வருகிறார் - வட கொரியா
x
தினத்தந்தி 22 Sep 2017 8:11 AM GMT (Updated: 22 Sep 2017 8:11 AM GMT)

வட கொரியா மீது புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது.

வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்குவேன் என வட கொரியா ஜனாதிபதி கிம் யோங் உன் சவால் விடுத்துள்ளார். வட கொரியா 6-வது முறையாக அணு ஆயுத பரிசோதனை செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை நேற்று அறிவித்தது.

இப்புதிய தடை மூலம் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை செய்வது தாமதமாக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது. இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு காகிதத்தை வைத்தவாறு கிம் யோங் உன் இடம்பெற்றுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘அறிவில்லாத கிழவனான டொனால்ட் டிரம்பை கடுமையான தாக்குதல்கள் மூலம் அடக்கி காட்டுவேன்.

டொனால்ட் டிரம்ப் பின்விளைவுகளை சிந்திக்காமல் வட கொரியாவை சீண்டி வருகிறார். டிரம்பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அவர் கற்பனையிலும் எண்ண முடியாத முடிவுகளை சந்திப்பார். இது தொடர்பாக  தாங்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story