ஐநா பொதுசபையில் சீனா மீது பாசத்தையும் இந்தியா மீது விரோதத்தையும் காட்டிய பாகிஸ்தான்


ஐநா பொதுசபையில்  சீனா மீது பாசத்தையும் இந்தியா மீது விரோதத்தையும் காட்டிய பாகிஸ்தான்
x
தினத்தந்தி 22 Sep 2017 10:25 AM GMT (Updated: 22 Sep 2017 10:25 AM GMT)

காஷ்மீர் பிரச்சினை வரலாற்றி எஞ்சியிருக்கும் ஒரு பிரச்சினை என சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறி உள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான்  தான் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், என  சீனா காஷ்மீர் பிரச்சினை  மீது அதன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி ஐ.நா. புதிய சபையில் பேசும் போது காஷ்மீருக்கு சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும் என கூறினார். பாகிஸ்தான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஐப்பானை பயன்படுத்தி இந்தப் பிரச்சினையை எழுப்பி உள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் பாகிஸ்தான் மேற்கோள் காட்டிய விவகாரத்தில்,இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஜெனீவாவில் இந்தியாவின் நிரந்தர மிஷன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் எந்தவொரு தலையீடும் தேவை இல்லை என சுட்டி காட்டியது. எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள்  செய்யாமல் இருக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை இந்தியா    கடுமையாக அறிவுறுத்தியது. சீனா இந்த பிரச்சினையில் ஆதரவு இல்லை என தெரிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயத்திற்கான சட்டபூர்வமான போராட்டம் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் படைகளால் மிருகத்தனமாக ஒடுக்கப்படுகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி ஐநா பொதுச்சபையில் கூறி உள்ளார்.

ஐநா புது சபையில் சீனா மீது பாசத்தையும் இந்தியா மீது விரோதத்தையும் பாகிஸ்தான் காட்டி உள்ளது.

Next Story