தற்கொலை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் டிரம்ப்தான் பொறுப்பு - வடகொரியா


தற்கொலை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் டிரம்ப்தான் பொறுப்பு - வடகொரியா
x
தினத்தந்தி 24 Sep 2017 4:57 AM GMT (Updated: 24 Sep 2017 4:57 AM GMT)

தற்கொலை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு என வடகொரியா கூறிஉள்ளது.


நியூயார்க்,

வடகொரியா ஐ.நா. சபையின் கடினமான பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கண்டனம் என எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபரான பின்னர் ஐ.நா. சபையில் முதல்முறையாக உரையாற்றிய டொனால்டு டிரம்ப், “வடகொரியாவின் பொறுப்பற்ற அணு ஆயுதங்கள் மற்றும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கே எச்சரிக்கையாக உள்ளது. வடகொரியாவின் ராக்கெட் மனிதனின் செயல்பாடு தன்னையும் மற்றும் தன்னுடைய பிராந்தியத்தையும் அழித்துக்கொள்ளுவது. அமெரிக்காவிற்கு ஆபத்து என்றால், எந்தஒரு வழியும் கிடையாது வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து,” என்றார். 

அமெரிக்கா தயாராக உள்ளது, வடகொரியாவை முற்றிலும் அழிக்கவும் முடியும், ஆனால் இது தேவையாக இருக்காது என நம்புகிறோம், இது ஐ.நா.சபையை பொறுத்தது என்றும் குறிப்பிட்டார். உடனே வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், “டிரம்புக்கு புத்தி பேதலித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார். இதற்கு பதிலடியாக டிரம்ப், “ கிம் ஜாங் அன் பைத்தியக்காரர். சொந்த மக்களையே பட்டினி போடுகிறார் அல்லது கொல்கிறார். இதுவரையில் இல்லாத வகையில் அவர் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்” என எச்சரித்தார். இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியா எப்போது போல் தன்னுடைய ஏவுகணை பணியை தொடங்கி விட்டது. இந்நிலையில் வடகொரியா தற்கொலை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு என கூறிஉள்ளது. ஐ.நா.சபையில் உரையாற்றிய வடகொரியா வெளியுறவுத்துறை மந்திரி ரி யாங் ஹு, தற்பெருமை பேசிக்கொண்டு, மனநிலை குழம்பிய டொனால்டு டிரம்ப் கையில் அணு ஆயுதத்தை இயக்கும் பட்டன் உள்ளது, டொனல்டு டிரம்பைவிட தற்கொலை மனிதர் யாரும் கிடையாது என விமர்சனம் செய்து உள்ளார். 

Next Story