போலி போட்டாவை காட்டி ஐ.நா. பொது சபையில் அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தான்


போலி போட்டாவை காட்டி ஐ.நா. பொது சபையில் அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தான்
x
தினத்தந்தி 25 Sep 2017 6:16 AM GMT (Updated: 25 Sep 2017 6:15 AM GMT)

ஐ.நா. பொது சபையில் போலியான புகைப்படத்தை காட்டிய பாகிஸ்தான் தூதரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமானது.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி நேற்று பேசினார். அப்போது காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார். அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த பெண் காஷ்மீரை சேர்ந்தவர் அல்ல, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை, ஹெய்தி லெவைன் என்ற பிரபல புகைப்பட கலைஞர் படம் பிடித்து வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்ளிட்ட நாளிதழ்களில் ரவியாவின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக சித்தரித்து ஐ.நா. சபையில் அனுதாபத்தை அள்ள பாகிஸ்தான் தூதர் மலீஹா நேற்று நாடகமாடினார். ஆனால் அவரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமாகிவிட்டது. இதன்காரணமாக சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அசிங்கப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது.
UN represents picture of Gaza woman with pellet guns on her face as Kashmir,resident...

Read more at: http://www.indialivetoday.com/un-represents-picture-gaza-woman-pellet-guns-face-kashmirresident/202743.html

Next Story