அமெரிக்காவே போரை அறிவித்து உள்ளது, எங்களால் எதிர் நடவடிக்கையை எடுக்க முடியும் - வடகொரியா


அமெரிக்காவே போரை அறிவித்து உள்ளது, எங்களால் எதிர் நடவடிக்கையை எடுக்க முடியும் - வடகொரியா
x
தினத்தந்தி 25 Sep 2017 3:44 PM GMT (Updated: 25 Sep 2017 3:44 PM GMT)

அமெரிக்காவே எங்களுக்கு எதிராக போரை அறிவித்து உள்ளது, எங்களால் எதிர் நடவடிக்கையை எடுக்க முடியும் என வடகொரியா கூறிஉள்ளது.


நியூயார்க்,


வடகொரியா ஐ.நா. சபையின் கடினமான பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கண்டனம் என எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.நா. சபையிலும் வடகொரியாவும், அமெரிக்காவும் வார்த்தையால் மோதிக்கொண்டது. இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை தாக்குதல்கள் அப்பாவி அமெரிக்கர்களை பாதித்தால் அதற்கு டொனால்டு டிரம்ப்தான் பொறுப்பு
 என வடகொரியா ஐ.நா. சபையில் கூறியது. இப்போது அமெரிக்காவே எங்களுக்கு எதிராக முதலாவது போரை அறிவித்து உள்ளது என குறிப்பிட்டு உள்ளது வடகொரியா. 

“எங்களுக்கு எதிரான போரை முதலாவதாக அமெரிக்காவே அறிவித்தது என்பதை ஒட்டுமொத்த உலக நாடுகளும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்,” என நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய  வடகொரியா வெளியுறவுத்துறை மந்திரி ரி யாங் ஹு கூறிஉள்ளார். 

எங்களுடைய நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போரை அறிவித்து உள்ளநிலையில், எங்களுக்கு எதிர் நடவடிக்கையை எடுக்க உரிமை உள்ளது. வடகொரியாவின் வான் எல்லையில் பறக்கும் அமெரிக்காவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் எங்களுக்கு உரிமை உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார் ரி யாங் ஹூ.  

Next Story