பாகிஸ்தானில் 9 இடங்களில் அணு ஆயுதங்கள் பதுக்கி வைப்பு


பாகிஸ்தானில் 9  இடங்களில் அணு ஆயுதங்கள் பதுக்கி வைப்பு
x
தினத்தந்தி 26 Sep 2017 5:16 AM GMT (Updated: 26 Sep 2017 5:16 AM GMT)

அணு ஆயுதங்களை பாகிஸ்தான், 9 ரகசிய இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

புதுடெல்லி

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக சிறிய தூர இலக்கை தாக்கும் ஏவுகணை தயாரிக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கூறி இருந்தார்.

அதுமட்டுமின்றி நாங்கள் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடு என்று கூறி, இந்தியாவை மிரட்டி வந்த நிலையில் அந்நாட்டில் உள்ள அணு ஆயுத ரகசிய மையங்கள் குறித்த தகவல்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (FAS)
பாகிஸ்தான் நாட்டில் ஒன்பது வெவ்வேறு இடங்களில் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது என கூறியது.


அதில், பாகிஸ்தான் தனது ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்தி வருவதாகவும், பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், 130 முதல் 140 வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும், ஏவுகணைகள், ராக்கெட்டுகள், டார்பிடோக்கள் போன்றவை அந்நாட்டிடம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், நிபுணர்களின் ஆய்வுகள், உள்ளூர் செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பாகிஸ்தான் அதன் அணு ஆயுதங்களை தயாரிக்கும் அல்லது சேமித்து வைக்கும் நம்பகமான பொது தகவல் இல்லை. எனவே, நாங்கள் வர்த்தக செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி கண்டறிந்து உள்ளோம். என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story