அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் வடகொரியா எச்சரிக்கை


அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் வடகொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Sep 2017 8:02 AM GMT (Updated: 26 Sep 2017 8:02 AM GMT)

அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பியாங்யாங்,

வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரி விக்கின்றன. அதை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.

இதனால் அமெரிக்காவின்  தலையீட்டின் பேரில் வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்து வருகிறது. இப்பிரச்சினையால் அமெரிக்கா-வட கொரியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங் மற்றும் அந்நாட்டு  மந்திரிகளை கடுமையாக தாக்கி பேசினார். தொடர்ந்து மிரட்டல் விடுத்தால் வடகொரியா மீது தாக்குதல் நடத்தப்படும்‘ என எச்சரித்தார். இதே கருத்தை டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையில் பேசிய வடகொரிய வெளியுறவு மந்திரி ரி யோஸ் ஹோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘அமெரிக்கா தான் முதலில் எங்கள் நாட்டின் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. இது ஒரு மிரட்டலாகும். இதை உலகம் முழுவதும் அறியும்.  எனவே நாங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. 

இந்த நிலையில் எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க போர் விமானங்கள் பறந்தால் அவற்றை சுட்டு வீழ்த்து வோம் என எச்சரித்தார்.  இதற்கிடையே, அதிபர் டிரம்ப் வடகொரியா மீது போர் பிரகடனம் அறிவிக்க வில்லை என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் மறுத்துள்ளார்.

Next Story