ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு


ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
x
தினத்தந்தி 19 Oct 2017 8:36 AM GMT (Updated: 19 Oct 2017 8:36 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தெற்கு பகுதியான  கந்தகார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளனர். வெடி குண்டுகள் நிரப்பிய இரண்டு கார் மூலம் முதலில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலீபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். 

2014 ஆம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டு படைகள் தங்கள் போர் நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது முதலே ஆப்கான் படைகள் தலீபான் பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று பால்க் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story