பிரதமர் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்; லெபனான் அதிபர் ஆன்


பிரதமர் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்; லெபனான் அதிபர் ஆன்
x
தினத்தந்தி 15 Nov 2017 12:01 PM GMT (Updated: 15 Nov 2017 12:01 PM GMT)

லெபனான் பிரதமர் சாத் ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மிச்செல் ஆன் இன்று கூறியுள்ளார்.

பெய்ரூட்,

லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி.  இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹரிரி சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் சில நாட்களில் நான் லெபனான் திரும்புவேன். வளைகுடாவில் நூற்றுக்கணக்கான லெபனானிய மக்களுடைய வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன என கூறினார்.

இந்நிலையில் டுவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெபனான் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.  நான் நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ள ஹரிரி, இன்னும் 2 நாட்களில் லெபனானுக்கு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹரிரி சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் இன்று கூறியுள்ளார்.

அவர் லெபனான் ஜனாதிபதி அலுவலக டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் சாத் ஹரிரி 12 நாட்களாக நாடு திரும்பவில்லை.  அதனால் அவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Next Story