மிஸ் வேர்ல்டு 2017 போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் மகுடம் சூடினார்


மிஸ் வேர்ல்டு 2017 போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் மகுடம் சூடினார்
x
தினத்தந்தி 18 Nov 2017 3:40 PM GMT (Updated: 18 Nov 2017 3:40 PM GMT)

இந்தியாவின் மனுஷி சில்லர் மிஸ் வேர்ல்டு 2017 போட்டியில் மகுடம் சூடினார்.

பெய்ஜிங்,

சீனாவின் சான்யா நகரில் மிஸ் வேர்ல்டு 2017 போட்டி நடந்தது.  இந்த போட்டியில் முதல் 5 இடங்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுடன் இந்தியாவின் மனுஷி இடம் பிடித்துள்ளார்.

அரியானாவை சேர்ந்த 20 வயது நிறைந்த மருத்துவ மாணவியான மனுஷி இந்த வருடம் மே மாதம் நடந்த பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2017 போட்டியில் பட்டம் பெற்றவர்.

அவர் அழகி போட்டியில் வெற்றி பெற்றது பற்றி டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது.

2வது மற்றும் 3வது இடங்களை மிஸ் இங்கிலாந்து ஸ்டெபானி ஹில் மற்றும் மிஸ் மெக்சிகோ ஆண்ட்ரியா மெஜா பிடித்துள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு இறுதியாக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தினை வென்றார்.  அதற்கு முந்தைய வருடம் யுக்தா முகி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராயும், 1997ம் ஆண்டில் டையானா ஹெய்டனும் இந்த பட்டம் வென்றனர்.

1966ம் ஆண்டு முதன்முதலில் ரீட்டா பரியா உலக அழகி பட்டத்தினை வென்ற இந்தியராவார்.


Next Story