டிரம்புக்கு அணுசக்தி தளபதி எதிர்ப்பு


டிரம்புக்கு அணுசக்தி தளபதி எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Nov 2017 11:00 PM GMT (Updated: 19 Nov 2017 8:05 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சட்டவிரோதமாக அணு ஆயுத தாக்குதல் நடத்துமாறு கூறினால் அதை ஏற்காமல், நிராகரிப்பேன் என்று அணுசக்தி தளபதி கூறி உள்ளார்.

வாஷிங்டன்,

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருவது அமெரிக்காவுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. அந்த நாட்டை எப்படியேனும் அந்த சோதனைகளை கைவிட வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார்.

இந்த விவகாரத்தில் டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

சமீபத்தில் ஆசிய நாடுகளில் டிரம்ப் பயணம் செய்து, வடகொரியாவுக்கு எதிராக அந்த நாடுகளின் தலைவர்களின் ஆதரவை திரட்டும் முயற்சியை மேற்கொண்டார்.

ஆனால் டிரம்ப் போருக்காக கெஞ்சுகிறார் என்று வடகொரியா சாடியது.

ஒரு கட்டத்தில் வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் முடிவுக்கு டிரம்ப் செல்லக்கூடும் என்பது உலகளாவிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

ஆனால் டிரம்புக்கு அமெரிக்காவின் அணு ஆயுத தளபதியே ஆதரவாக இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கனடாவில் உள்ள நோபா ஸ்கோட்டியாவில் ஹாலிபேக்ஸ் சர்வதேச பாதுகாப்பு பேரவையில் அமெரிக்க அணு ஆயுத தளபதி ஜெனரல் ஜான் ஹைடன் பேசினார். அப்போது அவர் டிரம்பின் அணு ஆயுத தாக்குதல் திட்டத்துக்கு தான் எதிரானவன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

Next Story