சிங்கப்பூரில் சக இந்தியரிடம் கொள்ளையடித்த இந்தியருக்கு 3 வருட சிறை தண்டனை


சிங்கப்பூரில் சக இந்தியரிடம் கொள்ளையடித்த இந்தியருக்கு 3 வருட சிறை தண்டனை
x
தினத்தந்தி 23 Nov 2017 6:22 AM GMT (Updated: 23 Nov 2017 6:22 AM GMT)

சிங்கப்பூரில் சக இந்தியரிடம் இருந்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய இந்தியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியர் யெல்சூர் ஸ்ரீனிவாஸ் (வயது 51). இவர் கடந்த வருடம் மே மாதம் 25ந்தேதி டவுனர் சாலையில் இரவில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

அவரை பின்னால் வந்து பிடித்து தள்ளிய 3 பேர் அவரிடம் இருந்து 31 ஆயிரத்து 910 அமெரிக்க டாலர் மதிப்புள்ள நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

அடுத்த நாள் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரில் ஒருவரான வெங்கடாசலபதி (வயது 48) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் கொள்ளையை தலைமையேற்று நடத்தியதுடன் துணையாக ஸ்ரீநாத் மற்றும் ஹாசன் ஆகியோரையும் அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார் என தெரிய வந்தது.

வெங்கடாசலபதிக்கு கடந்த 2ந்தேதி 4 வருடம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 12 சவுக்கடிகளும் அவருக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட இந்தியருக்கு ஸ்ரீநாத் (வயது 50) 3 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வயது முதிர்வினால் ஸ்ரீநாத்திற்கு சவுக்கடிகளுக்கு பதில் கூடுதலாக 20 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


Next Story