உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 13 Dec 2017 10:30 PM GMT (Updated: 13 Dec 2017 6:37 PM GMT)

* சீனாவில் பீஜிங் நகரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து நேரிட்டது. இதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிற ஹக்கானி வலைச்சமூகம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நாட்டின் அரசியல் தலைமை (பிரதமர்) தனது கட்டுப்பாட்டை இழக்க வேண்டியது வரும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீண்டும் கண்ணியமான முறையில் குடியேறவும், உள்நாட்டில் பதற்றமான சூழலை குறைக்கவும் உதவத்தயார் என ஐ.நா.சபையின் அரசியல் விவகாரங்கள் துறை கீழ் நிலை தலைமைச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் கூறி உள்ளார்.

* ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் நாட்டில் வெளியுறவு, எரிசக்தி, தொழில்–வர்த்தகம், விவசாயம்–உணவு பாதுகாப்பு துறைகளை கவனித்து வந்த 4 மந்திரிகளை அதிபர் பிலிப்பி பதவி நீக்கம் செய்துள்ளார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் மின்டாநாவ் மாகாணத்தில் ராணுவ ஆட்சியை மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்க அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

* சிட்னி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறாவிட்டால், அது அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்து விடும் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறி உள்ளார்.

Next Story