உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: உணவு பாதுகாப்பு குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை


உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி:  உணவு பாதுகாப்பு குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை
x
தினத்தந்தி 14 Dec 2017 7:46 AM GMT (Updated: 14 Dec 2017 7:46 AM GMT)

உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில், உணவு பாதுகாப்பு குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை

பியூனஸ்,

உலக வர்த்த ஒப்பந்த அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக ,உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக வளரும் நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. முக்கியமாக, உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதி பங்கேற்கவில்லை. இதனால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் அதிருப்தி அடைந்தன.

இந்தியா சார்பில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான குழு இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாணப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பும் வலியுறுத்தி வருகிறது.

உலக வர்த்த அமைப்பின் விதிகளின்படி அதில் உறுப்பினராக உள்ள நாடுகளின் உணவுப் பொருள் மானியத் தொகை, அந்நாடுகளின் உணவு உற்பத்தில் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பான விதிகளை மேலும் தளர்த்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றன


Next Story