இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு தோல்வி


இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு தோல்வி
x
தினத்தந்தி 14 Dec 2017 11:00 PM GMT (Updated: 14 Dec 2017 6:58 PM GMT)

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மேற்கொண்டு வருகிறார்.

லண்டன்,

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இதற்கான பிரிவினை உடன்படிக்கையை அவர் ஏற்படுத்தினார். இதற்காக 45–55 பில்லியன் ஈரோ (சுமார் ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில்) தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து முறைப்படி இங்கிலாந்து விலகுவதற்கான மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மீது கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், பிரதமர் தெரசா மே தோல்வி அடைந்தார். அவரின் விருப்பத்துக்கு மாறாகவும், திருத்தத்துக்கு ஆதரவாகவும் 309 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 305 ஓட்டுகள் விழுந்தன.

தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை சில எம்.பி.க்கள் எடுத்ததே அவருடைய தோல்விக்கு காரணம் ஆயிற்று.


Next Story