காபூல் ஓட்டல் தாக்குதல்: 5 பேர் பலி; 8 பேர் காயம்


காபூல் ஓட்டல் தாக்குதல்:  5 பேர் பலி; 8 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Jan 2018 6:34 AM GMT (Updated: 21 Jan 2018 6:34 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். #Kabul

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.  இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர்.

தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது.  அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர்.

இத்தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர்.  8 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 பேர் விடுவிக்கப்பட்டடனர்.  இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் இந்த ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

#Kabul #latesttamilnews


Next Story