இந்தியா–பாகிஸ்தான் பிரச்சினையில் தலையிட மாட்டோம் ஐ.நா. சபை அறிவிப்பு


இந்தியா–பாகிஸ்தான் பிரச்சினையில் தலையிட மாட்டோம் ஐ.நா. சபை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2018 1:21 PM GMT (Updated: 23 Jan 2018 1:21 PM GMT)

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் என்பதை ஐ.நா. சபை நிராகரித்துவிட்டது. #KashmirIssue #Pakistan #UN #India



நியூயார்க், 

காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ச்சியாக சர்வதேச சபையில் எழுப்பி வருகிறது. இதில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா ஸ்திரமாக கூறிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் சமீபகாலமாக தொடர்ந்து மோதல் சம்பவம் நடந்து வருகிறது. எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது என்பதை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது. மேலும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறிவிட்டது.

ஐ.நா. பொது சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசுகையில், பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் எப்போதும் தயாராகதான் உள்ளார், ஆனால் சர்வதேச சபையின் செயல்பாட்டை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பு இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. டுகாரிக் பதில் அளித்து பேசுகையில், நாங்கள் வெளிப்படையாகவே அதனை அறிவோம். நாங்கள் அதனை கண்காணித்துதான் வருகிறோம். கடந்த 10 நாட்களாக என்ன நடக்கிறது என்பதையும் பார்க்கிறோம், என்றார். இப்பிரச்சனையில் தலையிட ஐ.நா. பொதுச்செயலாளர் தயராக இல்லை என்பது போன்று தெரிகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசியக டுகாரிக், இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளார். 

அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விருப்பம் தெரிவித்து உள்ளார் என குறிப்பிட்டார். 


Next Story