கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி | அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல் |

ஆன்மிகம்

25. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி + "||" + thiruppavai in anmeegam

25. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி

25. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறை
திருப்பாவை

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான்  தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி ஆகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஒரு இரவில் வசுதேவனின் மனைவியாகிய தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனின் மனைவி யசோதை யின் பிள்ளையாய் மறைவாக வளர்ந் தாய். இதையறிந்த கம்சன் உனக்குத் தீங்கிழைக்க நினைத்தபோது அந்த எண்ணத்தையே அழித்
தொழித்து அவன் வயிற்றில் நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக் கடலே! அடியவர் களுக்கு அருள் வழங்குகின்ற தலைவனாகிய உன்னை வணங்க வந்தோம். எங்களின் வேண்டுகோளை நிறைவேற்றினால் உன் செல்வத்தையும் சேவகத்தையும் பாடி மகிழ் வோம்! எங்கள் வருத்தம் நீங்கி, மகிழ்ச்சி அடைவோம்.

திருப்பள்ளியெழுச்சி


பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறி வாரை
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாயெங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


நீர் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய வயல்களால் சூழ்ந்த திருப்பெருந்துறைக்கு அரசனே! நீ பஞ்ச பூதங்களில் மண், ஆகாயம், நீர், நெருப்பு, காற்று ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக் கின்றாய். பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று உன்னை புலவர்கள் கூறிப் புகழ்ந்து ஆடிப் பாடுகின்றனர். இதைத்தவிர உன்னை கண்டறிந்தவர்களை இதுவரை நாங்கள் கேட்டதில்லை. மனதாலும் ஊகித்து அறிய முடியாத தத்துவப் பொருளே! எங்கள் முன் தோன்றி எங்கள் குற்றங்களைக் களைந்து ஆட்கொள்ள வேண்டும். எம் பெருமானே துயில் நீங்கி பள்ளி எழுந்தருள்வாயாக.