பெருமை மிகுந்த பொற்றாமரைக்குளம்


பெருமை மிகுந்த பொற்றாமரைக்குளம்
x
தினத்தந்தி 23 Feb 2017 8:45 PM GMT (Updated: 22 Feb 2017 9:21 AM GMT)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளம் சிறப்பு மிக்க ஒன்றாக திகழ்கிறது.

துரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளம் சிறப்பு மிக்க ஒன்றாக திகழ்கிறது. சிவபெருமானை பூஜிப்பதற்காக இந்தக் குளத்தில் இருந்துதான், பொன் தாமரை மலரைப் பெற்றான் இந்திரன். மேலும் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை இந்தத் திருக்குளத்தில் தோன்றியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. அது மட்டுமின்றி ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளியபடி, இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், இன்னபிற நீர்வாழ் உயிரினங்களும் இல்லாமல் இருப்பது இன்றும் காணப்படும் அதிசயங்களில் ஒன்று. தருமிக்காக பாட்டெழுதிக் கொடுத்த சிவபெருமானின் பாடலைக் குற்றம் என்று கூறினார் நக்கீரர். அவரின் தமிழ் புலமையை உலகிற்கு பறைசாற்ற அவருடன் வாதம் செய்த சிவபெருமானின், நெற்றிக்கண்ணைக் கண்டும் பயம்கொள்ளாமல் தன் குற்றத்தில் நிலையாக இருந்தார் நக்கீரர். இதனால் அவரை தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்து பொசுக்கினார் ஈசன். பின்னர் பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, பொற்றாமரைக் குளத்தில் இருந்து நக்கீரரை உயிர்ப்பித்துக் கொடுத்தார்.

Next Story