செயலும்.. பலனும்..


செயலும்.. பலனும்..
x
தினத்தந்தி 15 March 2017 7:18 AM GMT (Updated: 15 March 2017 7:18 AM GMT)

* தனம் எதற்கு? தானம் செய்வதற்கு ! * வறுமை எதற்கு? வாய்மையில் நிற்பதற்கு! * அதிகாரம் எதற்கு? அரிய சேவை செய்வதற்கு!

* சொற்பலம் எதற்கு? சொல்லித் தருவதற்கு!
* குணம் எதற்கு? குன்றாப் புகழுக்கு!
* பூஜைகள் எதற்கு? புண்ணியம் தேடுவதற்கு!
* ஆலயம் எதற்கு? இறைவனைக் காண்பதற்கு!
* இரக்கம் எதற்கு? இருவினை அழிப்பதற்கு
* இறைவனை நினைப்பது எதற்கு? இப்பிறவிப் பயனை அடைவதற்கு!

பிறந்த கிழமை பலன்

ஞாயிறு - செல்வச் செழிப்போடு வாழ்வர்.
திங்கள் - தர்மவானாகத் திகழ்வர்
செவ்வாய் - கடின உழைப்பு உள்ளவர்.
புதன் - புத்திசாலிகளாகவும், புனித காரியங்களைச் செய்பவராகவும் இருப்பர்.
வியாழன் - ஒழுக்கமுடையவர், நீதி, நேர்மை மிக்கவராக விளங்குவர்.
வெள்ளி - கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.
சனி - சங்கடங்களுக்கு மத்தியில் சந்தோஷம் காண்பர். நிலைத்த புகழ் உடையவர்.

அதிகப் புத்திரர்கள் யாருக்கு?

* 5-க்கு அதிபதியும், குருவும், சனி, புதன் ஆகிய வீடுகளில் அமராமல் மற்ற வீடுகளில் இருக்க வேண்டும்.
* லக்னாதிபதியும், 5-க்கு அதிபதியும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும். அவர் களுக்கு சுபகிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ இருக்க வேண்டும்.
* 5-ம் வீட்டில் குரு வீற்றிருந்து லக்னாதிபதியை பார்க்க வேண் டும். இப்படி இருந்தால் அனேக புத்திரர்கள் பிறப்பார்கள்.

Next Story