பன்னீர் இலையில் பிரசாதம்


பன்னீர் இலையில் பிரசாதம்
x
தினத்தந்தி 8 May 2017 7:30 AM GMT (Updated: 8 May 2017 7:30 AM GMT)

திருச்செந்தூரில் முருகப்பெருமான் செந்திலாண்டவனாய் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்கு தரும்பொழுது, பன்னீர் இலையில் வைத்துத் தருவார்கள்.

திருச்செந்தூரில் முருகப்பெருமான் செந்திலாண்டவனாய் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்கு தரும்பொழுது, பன்னீர் இலையில் வைத்துத் தருவார்கள். இதன் காரணம் என்ன தெரியுமா? திருமுருகன் ஒரு பக்கத்திற்கு ஆறுகரங்கள் என ஈராறு கரங்கள் கொண்டவர். அது போலவே பன்னீர் மரத்தின் இலையிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பன்னிரண்டு நரம்புகள் கிளைத்திருக்கும். அதனால் தான் பன்னீர்மரம் எனப்பட்டது. ஈஸ்வரனிடத்தில் இருந்து பெறப்படுவதாலும், அஷ்ட ஐஸ்வரியங்களை தருவதாலும் விபூதிக்கு ஐஸ்வரியம் என்றும் ஒரு பொருள் உண்டு. திருச்செந்தூரில் தரும் பிரசாதம் ‘பன்னீர் செல்வம்’ என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பன்னீர் இலையின் வெண்ணிறப் பூக்களை இறை வழிபாடுகளில் பயன்படுத்தலாம்.


Next Story