லிங்கத்தின் மீது உறையும் நெய்


லிங்கத்தின் மீது உறையும் நெய்
x
தினத்தந்தி 12 July 2017 10:12 AM GMT (Updated: 12 July 2017 10:12 AM GMT)

இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்துவர, அந்த நெய்யே உறைந்து, சிவலிங்கத்தை மூடிவிட்டது.

கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்நாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்துவர, அந்த நெய்யே உறைந்து, சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரம் மட்டுமே சுமார் 4 அடி. இந்த நெய் லிங்கத்தைச் சுற்றி எத்தனையோ விளக்குகள் ஏற்றிவைத்த சூட்டிலும், வெயில் காலத்தில் உண்டாகும் வெப்பத்திலும் கூட நெய் உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கிறது. உறைந்த நெய்யின் சிறு துளியை பிரசாதமாக வாங்கி உண்டால், எந்த வித நோயும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

Next Story