வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 25 July 2017 9:01 AM GMT (Updated: 25 July 2017 9:01 AM GMT)

கேரளபுரம் என்ற கிராமத்தில் இரண்டரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, ஆவணியில் இருந்து ஆறு மாதங்கள் வெள்ளையாகவும், மாசியில் இருந்து ஆறு மாதங்கள் கருப்பாகவும் மாறும் அதிசயம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம்.

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் இரண்டரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலை, ஆவணியில் இருந்து ஆறு மாதங்கள் வெள்ளையாகவும், மாசியில் இருந்து ஆறு மாதங்கள் கருப்பாகவும் மாறும் அதிசயம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அந்த ஆலயத்தில் உள்ள கிணற்றின் தண்ணீரும் மாறுதல் அடைகிறதாம். அதாவது விநாயகர் கருப்பாக இருக்கும்போது, கிணற்று நீர் கலங்களாகவும், சுவை இழந்தும் இருக்குமாம். விநாயகர் வெள்ளை நிறத்திற்கு மாறும் போது, கிணற்றில் நீர் தரைப் பகுதி தெரியும் அளவுக்கு தெளிவுடனும், சுவை மிகுந்ததாகவும் மாறுவதாக இந்தப் பகுதியினர் கூறுகிறார்கள்.

Next Story