வாரம் ஒரு அதிசயம்


வாரம் ஒரு அதிசயம்
x
தினத்தந்தி 8 Nov 2017 8:24 AM GMT (Updated: 8 Nov 2017 8:24 AM GMT)

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரில் புகழ்பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஹாசனாம்பாதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

ர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரில் புகழ்பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஹாசனாம்பாதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். கோவிலின் கொடிமரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஈசனுடன், பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறான். இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல, அம்பாளை முன்னிறுத்தும் ஆலயமாகும். இந்த ஆலயத்தின் அதிசயம் என்ன என்கிறீர்களா? இந்தக் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறந்து வழிபாடு செய்யப்படுகிறது. அதுவும் ஒன்பது நாட்கள். தீபாவளி திருநாளையொட்டி இந்த ஒன்பது நாட்கள் வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த நேரத்தில் அம்பாளை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

Next Story