குரங்குகள் பூஜிக்கும் தலம்


குரங்குகள் பூஜிக்கும் தலம்
x
தினத்தந்தி 13 Dec 2017 8:05 AM GMT (Updated: 13 Dec 2017 8:05 AM GMT)

அனுமன், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது என்று தல புராணம் சொல்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் குந்தளேஸ்வரர்.

திருவானைக்கா, திருக்கோடிக்கா, திருக்கோலக்கா, திருநெல்லிக்கா மற்றும் திருக்குரங்குக்கா ஆகியவை பஞ்ச (கா) தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் திருக்குரங்குக்கா என்பது குரங்குகள் பூஜை செய்த தலம் என்று ெசால்லப்படுகிறது. ராமேஸ்வரத்தில், சீதை மணலால் செய்த லிங்கத்தை, அனுமன் தன்னுடைய வாலால் அகற்ற முயன்றார். இந்த சிவ பாவம் நீங்குவதற்காக, அனுமனை சிவ பூஜை செய்யும்படி கூறினார் ராமபிரான். இதையடுத்து அனுமன், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது என்று தல புராணம் சொல்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் குந்தளேஸ்வரர். அம்பாளின் திருநாமம் குந்தளநாயகி. இறைவனின் கருவறை வாசலில் இருகரங்களைக் கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் மூர்த்தம் உள்ளது. மேலும் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதியும் இருக்கிறது. இந்த ஆலயத்தில் வருடத்திற்கு ஒரு முறை சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் இரண்டு குரங்குகள் வந்து, சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகளை தூவி வழிபட்டுச் செல்கிறது. இது இன்றளவும் தொடர்ந்து வரும் அதிசய நிகழ்வாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story