விஸ்வரூப வைராக்ய ஆஞ்சநேயர்


விஸ்வரூப வைராக்ய ஆஞ்சநேயர்
x
தினத்தந்தி 13 Dec 2017 8:34 AM GMT (Updated: 13 Dec 2017 8:34 AM GMT)

திருத்துறை பூண்டியில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் 16 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியில் உள்ளது அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில். இங்கு 16 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி, அமாவாசை, மூல நட்சத்திரம் வரும் நாட்களில் ‘மட்டை தேங்காய்’ வழிபாடு நடக்கிறது. ஒரு சிவப்புத் துணியில், உரிக்காத மட்டைத் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சைப் பழம் மற்றும் வேண்டுதல் என்னவோ அதை எழுதிய துண்டுச் சீட்டு போன்றவற்றை முடிந்து, கோவில் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு பூஜை செய்த பின், அந்த முடிப்பு ஆலய உத்திரத்தில் கட்டப்படும். அடுத்த ஆண்டிற்குள் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிவிடுமாம். 

Next Story