தெரிந்து கொள்ளுங்கள் : அடுக்கு மாடி வீடு வாங்குவதற்கு முன்பு..


தெரிந்து கொள்ளுங்கள் : அடுக்கு மாடி வீடு வாங்குவதற்கு முன்பு..
x
தினத்தந்தி 6 Jan 2017 9:45 PM GMT (Updated: 6 Jan 2017 1:39 PM GMT)

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான மக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதில் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் முக்கியமாக இருக்கின்றன. இன்றைய தேதியில் அடுக்கு மாடி கட்டிடங்கள் இருபதுக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றன. அனைத்து

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான மக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதில் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் முக்கியமாக இருக்கின்றன. இன்றைய தேதியில் அடுக்கு மாடி கட்டிடங்கள் இருபதுக்கும் மேற்பட்ட தளங்கள் கொண்டதாகவும் அமைக்கப்படுகின்றன. அனைத்து விதமான வசதிகளும் கொண்டதாக இருப்பதோடு, நகரத்தின் அவசர வாழ்க்கை வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற வகையிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. அடுக்குமாடி வீடுகளை வாங்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய அவசியமான குறிப்புகளை சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.  

• கட்டுமானத்துக்கான அங்கீகாரம் பெற்ற வரைபடம் பற்றிய விவரங்கள் கட்டுமானம் நடக்கும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

• அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வடிவமைக்கப்பட்டிருப்பது முக்கியம்.

• மனையின் உரிமையாளர் அல்லது அந்த உரிமையாளரின் பொது அதிகார உரிமை பெற்றவருக்கு, பிரிக்கப்படாத மனை பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்வதற்கு உரிமை இருக்கிறதா..?  என்பதை கவனிக்க வேண்டும்.

• மனையின் உரிமையாளர் அல்லது உரிமையாளரது பொது அதிகார உரிமை பெற்றவர் பிரிக்கப்படாத மனையின் மொத்த பகுதிகளை அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர்களுக்கு மாற்றம் செய்து உள்ளாரா..? என்பதை சோதித்து அறிந்து கொள்வது முக்கியம்.

• கட்டுமான பணிகள் முடிவடைந்த கட்டமைப்புகள் சி.எம்.டி.ஏ வரைபடத்தின்படி கட்டப்பட்டுள்ளது என்பதற்கான பணி நிறைவு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

Next Story