சுட்டி குழந்தைகள் விளையாடும் குட்டி வீடுகள்


சுட்டி  குழந்தைகள்  விளையாடும்  குட்டி  வீடுகள்
x
தினத்தந்தி 10 Feb 2017 10:30 PM GMT (Updated: 10 Feb 2017 10:25 AM GMT)

தற்போதைய காலகட்டத்தில் வீடுகளில் 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் பராமரிப்பு என்பது பல நிலைகளை கொண்ட அணுகுமுறையாக இருக்கிறது.

ற்போதைய காலகட்டத்தில் வீடுகளில் 2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகள் பராமரிப்பு என்பது பல நிலைகளை கொண்ட அணுகுமுறையாக இருக்கிறது. கணவன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்லவேண்டிய நகர நாகரிகத்தில் குழந்தைகளை பராமரிக்க வெவ்வேறு வழிகள் தேவையாக இருக்கிறது.

பழைய காலங்களில் தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் சிறு குழந்தைகள் பராமரிப்பில் நேரடியாக ஈடுபட்டனர். இன்றைய நிலையில் அதுபோன்ற வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் மாற்று வழிகள் அவசியமாக உள்ளது. தாய், தந்தையர் தமது பணிகளை முடிந்து வரும் வரையில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள பல தனியார் அமைப்புகள் பொருளாதார ரீதியில் தமது சேவைகளை வழங்குகின்றன.

‘பிளே ஹவுஸ்’

இன்றைய சிறு குழந்தைகளின் அறிவுத்திறன் கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை மேலும் வளர்ச்சி பெற்றதாக ஆக்க அவர்கள் விளையாடும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்து பயன் பெறலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய வழிகளில் ‘கிட்ஸ் பிளே ஹவுஸ்’ எனப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு வீடுகள் அமைப்பும் ஒன்றாகும். மேலை நாடுகளில் பிரபலமாக இருக்கும் அத்தகைய முறை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

உபகரணங்கள்

2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் செயல்திறனுக்கு ஏற்ப அறிவுத்திறனை மேம்படுத்தவும், குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், மொழிகளை எளிதாக கற்கவும் விளையாட்டு வழியில் திறமைகளை மேம்படுத்தும் வகையிலான ‘பிளே ஹவுஸ்’ அமைப்புகளும் மற்றும் சிறிய வகையில் பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய உபகரணங்களும் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

வகைகள்

‘கிட்ஸ் பிளே ஹவுஸ்’ எனப்படும் குழந்தைகள் விளையாட்டு வீடுகள் மரம் மற்றும் ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. மேலும் அவை ‘இன்டோர் பிளே ஹவுஸ்’ எனப்படும் வீடுகளுக்குள் அமைக்கப்படுவதாகவும், ‘அவுட்டோர் பிளே ஹவுஸ்’ எனப்படும் வீட்டின் தோட்ட பகுதிகளில் அமைக்கப்படுவதாகவும் உள்ளன.

‘இன்டோர்’ வகை

வீடுகளுக்குள் அமைக்கப்படும் ‘பிளே ஹவுஸ்களில்’ குட்டியான படிப்பு மேசைகள், அழகான சிறு படுக்கைகள், சின்ன சின்ன பர்னிச்சர்கள் மற்றும் ‘மினியேச்சர்’ இசைக்கருவிகள் போன்றவற்றை அமைத்தால் குழந்தைகள் குஷியாக அவற்றில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். சிறிய வகையிலான கணினி விளையாட்டுகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.  

‘அவுட்டோர்’ வகை

வீடுகளுக்கு வெளியே அல்லது தோட்டப்பகுதிகளில் ‘பிளே ஹவுஸ்’ அமைக்கும்போது அழகான குட்டி ஊஞ்சல்களை பொருத்தி குட்டிப்பசங்களை குஷியாக்கலாம். மேலும், அவற்றில் சிறு வகையிலான சறுக்கு விளையாட்டுகள், படிப்பு மேசைகள், மரக்கால் குதிரைகள், சிறிய படுக்கைகள், குட்டி பர்னிச்சர் அமைப்புகள் போன்றவற்றையும் உள்ளடக்கமாக அமைப்பது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

மேலும், சின்ன வகையிலான ஊஞ்சல், குட்டி டேபிள், சேர்கள், சிறியதாக கிச்சன்செட், விளையாட்டு பொருட்கள், சிறிய இசைக்கருவிகள் போன்றவையும் குட்டி வீடுகளில் அமைப்பதன் மூலமாக குழந்தைகளின் விளையாட்டு ஆர்வம் அறிவுப்பூர்வமானதாக மாற்றப்படும்.

Next Story