ஹாலுக்கு அவசியமான மின் விளக்கு அமைப்புகள்


ஹாலுக்கு  அவசியமான  மின்  விளக்கு  அமைப்புகள்
x
தினத்தந்தி 11 Aug 2017 9:30 PM GMT (Updated: 11 Aug 2017 10:56 AM GMT)

வீட்டின் மையப்பகுதியான ‘ஹாலுக்கு’ மின் விளக்குகள் அமைக்கும்போது, ‘ஜெனரல் லைட்டிங்’ முறை கச்சிதமாக இருக்கும் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டின் மையப்பகுதியான ‘ஹாலுக்கு’ மின் விளக்குகள் அமைக்கும்போது, ‘ஜெனரல் லைட்டிங்’ முறை கச்சிதமாக இருக்கும் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த முறையில் கிடைக்கக்கூடிய பரவலான வெளிச்சம் ஹாலை பளிச்சென்று காட்டும்.

பொதுவாக, அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள், ‘சோபாக்கள்’, ‘டீபாய்’, ‘கு‌ஷன் சேர்கள்’, ‘ஷோகேஸ்’ மற்றும் ‘கபோர்டுகள்’ ஆகியவை ஹாலில்தான் அமைக்கப்பட்டிருக்கும். விதவிதமான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பெரிய ஜன்னல்கள், கதவுகள் மற்றும் ‘வென்டிலேட்டர்கள்’ ஆகியவை பகல் வெளிச்சம் சுலபமாக வருவதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.

‘ஹாலின்’ அளவுக்கேற்ப ‘ஜெனரல் லைட்டிங்’ யுக்திப்படி தரையில் இருந்து 7 அடி உயரத்தில் மின்விளக்கின் அடிப்பாகம் இருப்பதுபோல அமைத்தால் வெளிச்சம் பரவலாக கிடைக்கும். மேலும் ஜன்னல் திரைகள் வெளிர் வண்ணத்தில் இருப்பதும் முக்கியம். ‘டிராயிங் ரூமிலும்’ இம்முறைப்படி ‘லைட் செட்டிங்’ அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளலாம்.

Next Story