தேசிய கட்டுமான நிறுவனம் அறிமுகப்படுத்தும் நவீன தொழில் நுட்பம்


தேசிய  கட்டுமான  நிறுவனம்  அறிமுகப்படுத்தும்  நவீன  தொழில்  நுட்பம்
x
தினத்தந்தி 11 Aug 2017 10:00 PM GMT (Updated: 11 Aug 2017 11:13 AM GMT)

நாட்டின் பொதுத் துறை நிறுவனமான, ‘தேசிய கட்டுமான நிறுவனம்’ மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டுமானங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில்

நாட்டின் பொதுத் துறை நிறுவனமான, ‘தேசிய கட்டுமான நிறுவனம்’  மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டுமானங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் கட்டிடங்கள் ஆகியவற்றை அமைத்துத்தருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்த நிறுவனம் பல்வேறு தரச்சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளது.

பத்து நாளில் வீடு

அனைவருக்கும் வீடு திட்டம் செயல்பட்டு வரக்கூடிய இன்றைய சூழலில், இந்த நிறுவனமானது புதிய கட்டுமான நுட்பத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன தொழில் நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் சாந்து கலவை மற்றும் இதர மூலப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான வீடுகளை, ஒரே இடத்தில் கட்டிவிட முடியும். மேலும், அவற்றை குறைந்த விலையிலும், ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் என்ற கால அளவுக்குள்ளும், விரைவாக கட்டி முடிக்கலாம்.  

பட்ஜெட்டுக்கு உகந்தது

விரைவில் இந்த நவீன கட்டுமான முறை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இப்போதைய நிலவரத்தில் கட்டுமான பணிகளுக்கான செலவினங்கள் வெகுவாக குறையும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இவ்வகை வீடுகள் மத்திய தர மக்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.   

ஜிப்சம் பிரதானம்

மேற்கண்ட, தொழில்நுட்பத்தை பெறுவதற்காக, ஹங்கேரி நாட்டை சேர்ந்த ‘கிரெமவுன்ட் என்ஜினீயரிங்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், இந்திய தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றபடி ஈடு கொடுத்து உழைக்கும் என்பது குறிப்பிடத்தகது. ‘ஜிப்சம்’ எனப்படும் மூலப்பொருளை பிரதானமாக கொண்டு தயாரிக்கப்படும் இந்த சாந்து கலவையானது, கோடை காலங்களில் ஏறக்குறைய 10 டிகிரி வரையில் சூரிய வெப்பத்திலிருந்து வீடுகளை பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும், மழை மற்றும் பனி காலங்களிள் ஏற்படும் வெளிப்புற சீதோஷ்ண நிலை வீடுகளுக்குள் வராமலும் பாதுகாக்கும் என்றும் மேற்கண்ட என்.பி.சி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story