சிக்கன முறையில் அஸ்திவார அமைப்பு


சிக்கன முறையில் அஸ்திவார அமைப்பு
x
தினத்தந்தி 18 Aug 2017 11:00 PM GMT (Updated: 18 Aug 2017 1:38 PM GMT)

கட்டுமான அமைப்புகளின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில், அஸ்திவாரத்திற்கான செலவு என்பது கிட்டத்தட்ட மொத்த செலவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் இருக்கலாம்.

ட்டுமான அமைப்புகளின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில், அஸ்திவாரத்திற்கான செலவு என்பது கிட்டத்தட்ட மொத்த செலவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் இருக்கலாம். பொதுவாக, செம்மண் போன்ற சற்று கெட்டியான மண் அமைப்பு கொண்ட நிலங்களில் ‘ஆர்ச் பவுண்டே‌ஷன்’ (வில் போன்ற அமைப்பு கொண்ட அஸ்திவாரம்) என்ற முறையை பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்படுகிறது.

கரிசல் மண் போன்ற மென்மையான மண் அமைப்பு உள்ள நிலப்பகுதிக்கு ‘அண்டர் ரீம் பைல் பவுண்டே‌ஷன்’ முறையை கடைப்பிடிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அஸ்திவாரம் அமைக்கும் செலவில் 20 முதல் 25 சதவீதம் வரையிலும் மிச்சப்படுத்த முடியும் என்று வல்லுனர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஆர்ச் பவுண்டே‌ஷன்’ முறை என்பது பழைய காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறையாகும். இதன்படி அஸ்திவாரத்தின் ஆழம் அதிகமாக வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அஸ்திவாரத்தின் அடிப்பகுதியை தகுந்த தாங்கு சுவரை எழுப்பி பலப்படுத்திக் கொள்ளவும் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதன் மூலம், கட்டிடத்தின் மொத்த அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அஸ்திவாரம் உறுதியாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேற்கண்ட அஸ்திவார முறைகளுக்கு கட்டுமான வல்லுனர்களது ஆலோசனை அவசியம்.


Next Story