குடியிருப்புகளில் பால்ஸ் சீலிங் அமைப்பு


குடியிருப்புகளில் பால்ஸ் சீலிங்  அமைப்பு
x
தினத்தந்தி 1 Sep 2017 10:30 PM GMT (Updated: 1 Sep 2017 12:03 PM GMT)

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்ஸ் சீலிங் (False Ceiling) அமைப்பதற்கு முன்னர் வீட்டின் சீலிங் உயரம் 9 அடியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்ஸ் சீலிங் (False Ceiling)  அமைப்பதற்கு முன்னர் வீட்டின் சீலிங் உயரம் 9 அடியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், பொதுவாக கட்டமைப்புகளில் கணக்கில் கொள்ளப்படும் மனித உயரம் 6 அடி ஆகும். அந்த நிலையில் ஒருவர் கைகளை உயர்த்தும்போது, தரையிலிருந்து 7 அடி 4 அங்குல உயரத்தில் அவரது கையின் விரல் நுனிகள் இருக்கும். அந்த அளவை கணக்கிட்டு சீலிங் பேன் தரைத்தளத்தில் இருந்து 8 அடி 6 அங்குல அளவிற்கும் மேலாக இருக்கவேண்டும். அதன் காரணமாக, வீட்டிற்கு உள்ளே பால்ஸ் சீலிங் அமைக்கப்படும் பட்சத்தில் தரையிலிருந்து 8 அடி 6 அங்குல உயரத்திற்கும் மேலாக இருப்பதுதான் கச்சிதமான அமைப்பாகும். 

Next Story