ஆற்று மணல் பயன்பாட்டில் பரிசோதனை முறைகள்


ஆற்று மணல் பயன்பாட்டில் பரிசோதனை முறைகள்
x
தினத்தந்தி 16 Sep 2017 8:00 AM GMT (Updated: 16 Sep 2017 6:33 AM GMT)

பொதுவாக, நமது பகுதிகளில் நுண் ஜல்லியாக ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக, நமது பகுதிகளில் நுண் ஜல்லியாக ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது பல இடங்களில் கருங்கற்களை எந்திரத்தில் பொடியாக மாற்றி தயாரிக்கப்படும் எம்-சேண்ட் பயன்பாடும் உள்ளது. நுண் ஜல்லியாக உள்ள அதன் அளவுகளை பொறுத்து நான்கு நிலைகளாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் நிலை என்பது சொரசொரப்பான தன்மை கொண்டதாகவும், கடைசியாக உள்ள நான்காம் நிலை மிகவும் மென்மையாகவும் இருக்கும். அதன் காரணமாக இவ்வகை நுண் ஜல்லி கான்கிரீட் கலவையில் பயன்படுத்த அவ்வளவாக பரிந்துரை செய்யப்படுவதில்லை.

உள்ளடக்க சோதனை

பொதுவாக, ஆற்று மணலில் தூசு, களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக கலந்திருந்தால், கான்கிரீட் மற்றும் பூச்சு கலவையின் வலிமையை குறைக் கும். எனவே, வண்டல் மண் உள்ளடக்க சோதனை மூலம் அதன் அளவை கண்டறிய வேண்டும். தூசு மற்றும் வண்டல் மண் ஆகியவை அதிக அளவில் கலந்திருக்கும்பட்சத்தில் நீரால் நன்றாக கழுவி மணலை சுத்தம் செய்யவேண்டும்.

குளோரைடு சோதனை

குறிப்பாக, கான்கிரீட் கலவையின் வலிமையை பாதிக்கக்கூடிய, மைக்கா துகள்கள் மற்றும் தாவர மாசுகள் ஆகியவற்றின் அளவுகள் மணலில் எவ்வளவு உள்ளது..? என்பது சோதித்து அறியப்பட வேண்டும். மணலில் கலந்திருக்கக்கூடிய குளோரைடு இரும்பு கம்பியை அரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால், அதன் அளவும் பரிசோதிக்கப்பட வேண்டும்.

பிற சோதனைகள்

கான்கிரீட்டை முறையாக வடிவமைக்க, மணலின் நீர் உறிஞ்சும் தன்மை, ஈரத்தின் அளவு, சல்லடை பகுப்பாய்வு, அடர்த்தி, ஒப்படர்த்தி ஆகியவற்றை தகுந்த சோதனைகளை செய்து தரத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும். அதன் பிறகு முன்பே தீர்மானிக்கப்பட்ட சரியான விகிதாச்சாரத்தில் கலந்து பயன்படுத்தும்போது கான்கிரீட் மற்றும் பூச்சுக் கலவையின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவை அதிகரிக்கிறது. 

Next Story