மின்சார பாதிப்புகளை தடுக்கும் ‘எர்த்’ அமைப்பு


மின்சார பாதிப்புகளை  தடுக்கும் ‘எர்த்’ அமைப்பு
x
தினத்தந்தி 22 Sep 2017 10:00 PM GMT (Updated: 22 Sep 2017 11:01 AM GMT)

30 வருடங்களுக்கு முன்னர் வால்வு ரேடியோ வைத்திருப்பவர்கள், அதிலிருந்து ஒரு செம்பு கம்பியை இணைத்து அதைக்கொண்டு வந்து, வீட்டிற்கு வெளிப்புறமாக உள்ள சின்ன இரும்பு பைப் உடன் இணைத்து வைத்திருப்பார்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் வால்வு ரேடியோ வைத்திருப்பவர்கள், அதிலிருந்து ஒரு செம்பு கம்பியை இணைத்து அதைக்கொண்டு வந்து, வீட்டிற்கு வெளிப்புறமாக உள்ள சின்ன இரும்பு பைப் உடன் இணைத்து வைத்திருப்பார்கள். அதாவது மின்சாரம் மூலம் இயங்கும் எந்த சாதனமாக இருந்தாலும், ‘எர்த்’ கொடுப்பது என்ற முறை கடைபிடிக்கப்பட்டது. அந்த நிலையில் வால்வு ரேடியோ பயன்படுத்தும்போது சாதாரண மின் தாக்குதல்கூட ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

மின்சாதன பயன்பாடு

இன்றைய சூழ்நிலையில் வால்வு ரேடியோவை விடவும், பல மடங்கு மின்சார உபயோகம் கொண்ட சாதனங்கள் நம்மால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 3 பின்கள் கொண்ட பிளக்குகள் மூலம் மின் இணைப்பு தரப்படுகிறது. அவற்றில் உள்ள முதலாவது பெரிய பின் எர்த் அமைப்பாக செயல்படுகிறது. அப்படி இருந்தாலும் மின்சார தாக்குதல்கள் அவ்வப்போது ஏற்படத்தான் செய்கின்றன. பழைய முறையான ‘எர்த்’ கொடுக்கும் முறைகள் இப்போது பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது. குறிப்பாக, அடுக்குமாடி கலாசாரத்தில் மேற்கண்ட எர்த் முறையானது சாத்தியப்படாமல் போய்விட்டது.

மின்சார கசிவு

மின்சார கசிவு ஏற்படுவதன் காரணமாக, வீடுகளில் இயங்கும் கிரைண்டரில் உண்டாகும் மின் அதிர்வுகள், தண்ணீர் சுலபமாக மின்சாரத்தை கடத்தும் என்ற அடிப்படையில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வாட்டர் ஹீட்டரில் ஏற்படும் மின்சார கசிவு, மற்றொரு வீட்டின் குளியலறையில் இருப்பவர்களை பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பாதுகாப்பு அவசியம்

விலை உயர்ந்த டிவி, பிரிட்ஜ் போன்ற சாதனங்கள் சரியாக இயங்கவில்லை என்றால் செலுத்தப்படும் கவனம், அதன் மின் கசிவுக்கான பாதுகாப்பு வி‌ஷயத்தில் செலுத்தப்படுவதில்லை. குடும்ப அங்கத்தினர்களின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து வீடுகளிலும் செய்யப்படுவது முக்கியம்.

புதிய சாதனம்

மேற்கண்ட சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் செயல்படும் இ.எல்.வி.டி என்ற சாதனம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மின்சார சாதனங்களின் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப, வெவ்வேறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கிறது. பொதுவாக, வீடுகளுக்கு இரண்டு விதமான இ.எல்.வி.டி அமைப்பு போதுமானதாக இருக்கும்.

சுலபமான அமைப்பு

முன்னதாக இ.எல்.சி.பி.  என்ற தொழில்நுட்பமும் பயன்பாட்டில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், மிக்சி, அயர்ன்பாக்ஸ் போன்ற மின்சார சாதனங்களுக்கான பிளக்கில் மேற்கண்ட புதிய அமைப்பை சுலபமாக பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்திக்கொள்ளலாம். 

Next Story