சுற்று சூழலை பாதுகாக்கும் மாற்று செங்கல் பயன்பாடு


சுற்று சூழலை  பாதுகாக்கும்  மாற்று  செங்கல்  பயன்பாடு
x
தினத்தந்தி 13 Oct 2017 11:45 PM GMT (Updated: 13 Oct 2017 12:16 PM GMT)

மக்கள் தொகைப்பெருக்கம் மற்றும் நகர்மயமாக்கல் ஆகிய காரணங்களால் குடியிருப்புகளுக்கான இடம் அல்லது போதிய வசதிகள் பெருநகரங்களில் குறைவாக உள்ளது.

க்கள் தொகைப்பெருக்கம் மற்றும் நகர்மயமாக்கல் ஆகிய காரணங்களால் குடியிருப்புகளுக்கான இடம் அல்லது போதிய வசதிகள் பெருநகரங்களில் குறைவாக உள்ளது. அந்த நிலையில் கட்டுமான யுக்திகளில் புதிய முறைகளை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைவான செலவு மற்றும்  விரைவான கட்டமைப்பு ஆகிய வழிமுறைகள் மூலம் கட்டுமான பணிகளை குறுகிய இடத்தில் அமைக்க வேண்டியதாக உள்ளது.

கான்கிரீட் கற்கள்

மேற்கண்ட அவசியங்கள் காரணமாக கட்டுமான பணிகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு மாற்று வழிமுறைகளை பயன்படுத்துவது தவிர்க்க இயலாது. அந்த வகையில் சுவர்களை கட்டமைக்க செங்கற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கான்கிரீட் கற்கள் என்ற மாற்று வழியை பயன்படுத்தலாம்.  

பல்வேறு வகைகள்

மேலும், கான்கிரீட் சாலிட் பிளாக், கான்கிரீட் கேவிட்டி பிளாக், பிளை ஆஷ் செங்கல், சாயில் சிமென்ட் பிளாக் ஆகியவற்றை செங்கலுக்கு மாற்றாக பயன்படுத்தி கட்டுமான பணிகளை செய்து முடிக்கலாம். இத்தகைய மாற்று செங்கற்கள் தயாரிப்புக்கான தொழில் நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்புகள்

குறிப்பாக, செங்கலுக்காக மாற்று வழிகள் காரணமாக பலருக்கும் கூடுதல் வேலை வாய்ப்பு ஏற்படும் என்பதை தொழில் முனைவோர்கள் கவனிக்க வேண்டிய அம்சம். பிளை ஆஷ் என்பது மின்சார நிலையங்களிலிருந்து கிடைக்கும் சாம்பல் ஆகும். இயற்கை வளமான மண்ணை பயன்படுத்தாமல் மேற்கண்ட பிளை ஆஷ் மூலம் மாற்று செங்கல் தயாரிக்கப்படும் நிலையில் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

விழிப்புணர்வு வேண்டும்


பல்வேறு பயன்கள் கொண்டதாக இருந்தாலும், மாற்று செங்கல் பயன்பாடு என்பது அதிகமான உபயோகத்தில் இல்லை. மாற்று செங்கல் பற்றி போதிமான விழிப்புணர்வு மற்றும் அதை உபயோகிப்பதற்கான அடிப்படை பணித்திறம் ஆகியவை இல்லாத காரணத்தால் பலரும் அவற்றை பயன்படுத்த தயங்குகிறார்கள். இந்த நிலையை மாற்ற புதிய தொழில் முனைவோர்கள் பிளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய தக்க உதவிகள் மற்றும் சலுகைகளை அரசு அளிக்கும்பட்சத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். குறிப்பாக, தங்களது கட்டுமான பணியிடங்களில் தாங்களே பில்டிங் பிளாக்ஸ் உருவாக்கி பணிகளை செய்து வரும் கட்டுனர்களுக்கு அரசு சலுகைகள் பெரும் உதவியாக அமையும்.

மண் வளம் பாதுகாப்பு


மாற்று செங்கல் உற்பத்தியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த வி‌ஷயமாகும். அதாவது வழக்கமான செங்கல் உற்பத்திக்கு பயன்படும் களிமண் நிலவளத்தை பாதிக்கக்கூடியது. மேலும், செமி ஸ்கில்டு தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்படும் குறை திறன் கொண்ட தொழிலாளர்களை கொண்டும் மாற்று செங்கற்கள் உற்பத்தியை எளிதாக செய்ய முடிவதோடு, தற்போது சந்தையில் உள்ள நவீன இயந்திரங்கள் மூலமும் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

Next Story